Viral Video: ‘குழந்தைங்க எல்லாம் பாக்குறாங்க’ ஷிவின் ஆடை குறித்து பேசிய விக்ரமன்.. கடுப்பாகி ட்ரெஸ்ஸை தூக்கி எரிந்த ஷிவின்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
பிக்பாஸ் வீட்டில் மக்களுக்கு பிடித்த போட்டியாளர் என்றால் அது விக்ரமன் தான். மக்கள் நினைப்பதை அப்படியே அங்கே பேசி, மனா தைரியத்துடன் விளையாடி வருபவர். ஆனால், சமீபத்தில் சிலது இவருடைய செயல்கள் ரசிகர்களே கோவப்படும் அளவிற்கு மாறி வருகிறது. புரணி பேசுவது, முன்னுக்கு பின் முரணாக பேசுவது என இருந்து வருகிறார். அந்த வகையில், இவர் ஷிவின் உடை குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஷிவின் இந்த டிரஸ் போட போகிறேன் என்று காண்பிக்கிறார். உடனே, ஏடிகே இந்த டிரஸ் போடாதே.. என்று சொல்கிறார். பின் விக்ரமன் என்னங்க.. இது அநியாயமா இல்ல.. இதெல்லாம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்த மாதிரி ஆடை தேவையா? என்று கேட்கிறார். உடனே ஷிவின் , குழந்தைகள் பார்ப்பதற்கும் ஆடைக்கும் என்ன சம்பந்தம். குழந்தைகளுக்கு எது நல்லது, எது கெட்டது என எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
இப்படி நீதி, நியாயம், பெண்களுக்கு முக்கியத்துவம் என்று பேசும் விக்ரமன் ஆடை குறித்து பேசி இருப்பது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், சிலர் விக்ரமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதில் விக்ரமனின் தீவிர ரசிகர் ஒருவர், நீங்க போட்ட ட்விட்டர் பாருங்கள். எவ்வளவு ட்விஸ்ட் பண்ணி போட்டு இருக்கீங்க. அவர் அந்த ட்ரெஸ்ஸை போட வேண்டாம் என்று சொல்லவே இல்லை என ஆதரவு கூறியும் வருகின்றனர்.
பொண்ணுகல இந்த dress போடாத அசிங்கமா இல்ல என்று கேட்ட #Boomervikraman , இவரு தான் feminist, left, fake face வெளிய வந்துட்டு...#shivin செருப்படி reply to #Boomer
— Deepak Baskaran (@deepakbaskaran_) December 3, 2022
Retweet more... Once reach all..#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil #Azeem #Vikraman #kamalhassan pic.twitter.com/FoSKpBEhBt