தளபதி67 படத்தில் இந்த 2 ஹீரோயின்கள்.. வில்லனாக பிரபல தமிழ் நடிகர்..!

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கி இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்‌ஷன் வைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தினால், விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். வசூலிலும் விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால், வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில், நேற்று தளபதி67 படத்தை AVM ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

பூஜையில் இருந்த எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் பாணியில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்பதால் அதை காண விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

தற்போது வரை தளபதி67 படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தின் பூஜையில் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில், திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், ‘தளபதி67’ படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. மேலும் சாண்டி மாஸ்டரும் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுவதால், இந்த படத்திற்கு சாண்டி மாஸ்டர் நடன அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 heroines to act in thalapathy67 and actor ajun to take up villain role information getting viral on social media

விஷாலிடம் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளதாகவும், இவருடைய கதாபாத்திரம் விஜய்க்கு நிகரான வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் விஜய்க்கு ஹீரோயினாக த்ரிஷாவும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்தும் நடித்த உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலே அல்லது ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலோ ஆரம்பமாகும் என பரவலாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post