ஆடியோ லான்ச் ரத்தானத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் ட்வீட்.. இது போதும் எங்களுக்கு.. சோகத்தை மறக்க வைத்த ட்வீட்..
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் “நா ரெடி” பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இடப்பற்றாக்குறை, அதிகளவு டிக்கெட்டுகள் விற்பனை போன்ற பல விஷயங்களை காரணம் சொல்லி ஆடியோ லான்ச்சை ரத்து செய்துள்ளதாகவும், இனி நடக்க போவதில்லை எனவும் படக்குழு அறிவித்தது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இதனை சரி செய்யும் வகையில், படத்தின் 2வது சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு படத்தின் 2வது பாடல் வெளியாகும் என ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் இதுவே போதும் எங்களுக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி வசூல் குவித்து வரும் திரைப்படம் ஜவான். திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் ஜவான் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய், “ஜவான் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஷாருக்கான், அட்லீ மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.. லவ் யூ டூ ஷாருக்கான் சார்” என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த ட்வீட் எங்களுக்கு பாசிட்டிவ் vibe கொடுக்குது என கூறி வருகின்றனர்.