'எங்க பர்ஸ்ட் நைட் நடுரோட்டுல தான் நடந்துச்சு'... அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை ஹேமா..!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார். களத்து வீடு, சின்ன தம்பி போன்ற பல தொடர்களிலும், பாயும் புலி, ஆறாது சினம், சவரகத்தி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரது சமீபத்திய பேட்டி ஒன்று பற்றி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.
இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.
பேட்டியில் ஹேமாவிடம், சீரியலில் எடுக்கப்பட்ட முதலிரவு காட்சி குறித்த போட்டோவை காட்டி இந்த சீன் அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு நடிகை ஹேமா சொன்ன விஷயம் தான் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
இது குறித்து பேசிய அவர்,’அந்த முதலிரவு காட்சி எடுக்கப்பட்ட ரகசியம் பற்றி மக்களுக்கு தெரியாது.’ நடிகை ஹேமா இந்த முதலிரவு காட்சியை எங்கு எடுத்திருப்பார்கள் என்று நீங்களே சொல்லுங்கள் என்று தொகுப்பாளினியிடம் கேட்க, அவரோ, ஏதாவது ஒரு ரூமில் எடுத்து இருப்பார்கள் என்று பதில் அளித்தார்.
இதன் பின்னர் பேசிய ஹேமா,’அன்று அந்த சீன் எடுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில், அந்த ரூமில் வேறு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்த காட்சி சீரியலுக்கு மிகவும் முக்கியமானது என்பதால், அதோடு ஓரிரு நாட்களில் இந்த சீனை எடுக்காவிட்டால் மிகவும் கஷ்டம் என்பதால்,
இந்த சீனை நடுரோட்டில் ரூம் போன்ற செட் போட்டு இந்த முதலிரவு காட்சியை ஷூட்டிங் எடுத்தோம்.’ ஹேமா கூறியுள்ளார்.மேலும் அந்த காட்சி தான் என்னுடைய மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.