"படத்தில் எனக்கு Scope இல்லை.. விஜய்க்காக மட்டும் தான் நடிச்சேன்".. ராஷ்மிகா Open Talk..!
தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
குட் பாய், மிஷன் மஜ்னு, அனிமல், புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், வாரிசு பட ஷூட்டிங்கில் நடந்த சில விஷயங்களை ராஷ்மிகா பகிர்ந்துள்ளது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஷூட்டிங்கில் நான் நாற்காலியில் அமர்ந்து பக்கத்தில் இருந்த டேபிளில் தலையை சாய்த்து தூங்கிவிட்டேன். இதை பார்த்த விஜய் இயக்குரிடம், “இங்கே பாருங்க.. ஷூட்டிங் வருகிறார்.. சாப்பிடுகிறார்… தூங்குகிறார்.. இதையே தினமும் செய்கிறார்” என போட்டுக்கொடுத்துள்ளார்.
இதனை பகிர்ந்த ராஷ்மிகா, படத்தில் எனக்கு அவ்வளவாக ஸ்கோப் இல்லை. ஆனால் விஜய்க்காக மட்டுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, டேட் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். எனக்கான காட்சிகள் இல்லை என்றால் நான் என்ன செய்வது தூங்கிவிட்டேன். விஜய் செய்ததை நான் மறக்கவே மாட்டேன் இப்படி விஜய் சார் பண்ணுவார் என்று நினைக்கவில்லை என ராஷ்மிகா ஓப்பனாக பேசியுள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.