லியோ 2nd Single இந்த பேமஸ் தமிழ் ஹிட் சீன்'ல வர BGM காப்பியா..? வீடியோ பதிவிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.
திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் “நா ரெடி” பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இடப்பற்றாக்குறை, அதிகளவு டிக்கெட்டுகள் விற்பனை போன்ற பல விஷயங்களை காரணம் சொல்லி ஆடியோ லான்ச்சை ரத்து செய்துள்ளதாகவும், இனி நடக்க போவதில்லை எனவும் படக்குழு அறிவித்தது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
இதனை சரி செய்யும் வகையில், படத்தின் 2வது சிங்கிள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு படத்தின் 2வது பாடல் வெளியாகும் என ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வெளியான ப்ரோமோவை வைத்து நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர்.
அதாவது, அந்த பாடலின் ட்யூன் இங்கிருந்து தான் சுடப்பட்டது என கலாய்த்து வருகின்றனர். சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு நடித்த வின்னர் திரைப்படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள காமெடி தற்போது வரை ஃபேமஸ். அந்த காட்சியில் வரும் BGM எடுத்து Badass பாடலை அனிருத் உருவாக்கி உள்ளார் என கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
அனிருத் அண்ணே நீ கிங் னே கைப்பிள்ளை bgm ah எடுத்து கைப்பிள்ளை க்கே போட்ட பாரு 😂😂#JailerHistoricBO#JailerHistoricSuccess #superstarrajinikanth#Thalaivar pic.twitter.com/aP06ImLPbK
— Mani (@Mani74261081) September 27, 2023