விவாகரத்து சர்ச்சையை தொடர்ந்து.. பப்ளிக்காக மேடையில் நடிகருக்கு கிஸ் கொடுத்த பிரபல தமிழ் பட நடிகை..!
சசி குமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி, நடிகை என பல முகங்களை கொண்டவர்.
தமிழ் மொழியில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் திடீரென, தனது சமூக வலைத்தளங்களில் கணவருடன் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கிவிட்டார். இதனால் இருவரும் பிரிய போகின்றனரா என கேள்விகள் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்தன. ஆனால், இதனை பற்றி எந்த ஒரு பதிலும் ஸ்வாதி நேரடியாக கூறவில்லை.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, மந்த் ஆஃப் மது என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது.
அதில் பேசிய சாய் தரம் தேஜ், நானும் சுவாதியும் கல்லூரி நண்பர்கள். இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கூறினார். அப்போது திடீரென சுவாதி சாய் தரம் தேஜ் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். சுவாதியின் இந்த செயல் மேடையில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.