பாக்கியலட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் தமிழ் முன்னணி ஹீரோ.. லீக்கான ஷூட்டிங் வீடியோ இதோ..!
![actor siddharth to act in guest role in bakiyalakshmi serial shooting video viral](/images/2023/09/28/baakiyalakshmi-serial-siddharath-cover1-ciniglitz.jpeg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.
இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது. இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற்று, ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி, தன்னால் முடிந்த வரை பாக்கியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.
மற்றொருபுறம், கஷ்டப்பட்டு ராதிகாவின் கம்பெனியில் கேன்டியன் ஆர்டரை பாக்கியா கைப்பற்றிய நிலையில், தற்போது ராதிகாவின் சூழ்ச்சியால் அந்த வாய்ப்பு கையை விட்டு நழுவும் நிலையில் உள்ளது.
பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல முன்னணி நடிகர் இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் அவரின் காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.