நேரா கூட முகத்தை காட்ட முடில.. ஸ்டிராய்டுகளால் ஏற்பட்ட விளைவு.. - நேரலையில் வருந்திய சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது.
மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, சினிமா குறித்து சில பெர்சனல் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார்.
ரசிகர் ஒருவர், தங்களின் தோள் பளபளப்பாக இருக்க என்ன காரணம் என கேட்டார். அதற்கு சமந்தா, தோல் பளபளப்பாக இல்லை. நோயின் காரணமாக அதிகளவில் ஸ்டிராய்டுகள் எடுத்துக் கொண்டதால், முகத்தில் பளபளப்பு வந்துள்ளது. நேராக முகத்தை காட்ட முடியவில்லை, பில்டர்களை தான் பயன்படுத்தி வருகிறேன்.” என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Pure bliss ✨😍
— ℂհᎥttᎥ ❤️ (@AlwaysMeghamala) September 20, 2023
Her Smile @Samanthaprabhu2 😍❤️#SamanthaRuthPrabhu pic.twitter.com/ckpC2VysGX