இணையத்தில் ஆடையில்லா புகைப்படம் லீக்.. நடிகை பூனம் பாஜ்வா கொடுத்த பதில்..!
படிக்கும் காலம் முதலே மாடலிங் செய்து வந்த பூனம் பாஜ்வா, ரேம்ப் ஷோவில் பங்கேற்றதன் மூலம் தெலுங்கு மொழி திரைப்பட வாய்ப்பினை பெற்றார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரவே திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இதன் நடுவே, தமிழில் சேவல் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தமிழில் அறிமுகமானார். பின்னர், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர், சில படங்கள் நடித்து வந்த பூனம் பாஜ்வா, தனது உடல் எடை கூடிவிட்டார். இதனால் இவருக்கு துணை கதாபாத்திரங்களே அதிகம் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, ரோமியோ ஜூலியட், ஆம்பள, அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் கிளாமர் ரோல் ஏற்று நடித்தார்.
தற்போது முழு நேர கிளாமர் குயினாக மாறிய இவர், தனது உச்சகட்ட ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், உங்களுடைய புகைப்படம் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த இவர், அந்த மாதிரி புகைப்படங்களை பார்த்து நானே அதிர்ந்து போனேன். இரவில் தூங்கும் போது கூட அந்த புகைப்படம் என் கண்முன்னே வந்து நிற்கும். இரண்டு மூன்று நாட்களாக தூக்கம் இன்றி தவித்தேன்.
மேலும் சமூக வலைத்தளத்தில் அது குறித்து நான் புகார் செய்து உடனே அதை நீக்கி விட்டார். இருந்தாலும் ஒரு சில இது போன்ற நபர்கள் மீண்டும் அப்படி தான் செய்து வருகிறார்கள் என பேசியுள்ளார்.