18+.. குழந்தைகள் பார்க்க வேண்டாம்.. - ஜெயம் ரவி Open Talk.. வெளியான 'இறைவன்' படத்தின் கொடூரமான Sneak Peek

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் இறைவன். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ.அகமது இந்த படத்தை இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு A கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளம் பெண்களை தேடி தேடி கொலை செய்யும் சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி அளித்த பேட்டியில், “நான் பொதுவாக அனைத்து வகையான ரசிகர்களுக்கும் ஏற்றவாறு படம் நடிப்பேன். ஆனால், இறைவன் படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என சொல்வேன். படத்தைப் பார்த்து அவர்கள் பயப்பட வாய்ப்பு உண்டு” என தெரிவித்துள்ளார்.
Enter into ultimately cruel, bloodthirsty World of #Iraivan. #IraivanFromSep28 pic.twitter.com/dr6QQJiVjY
— T H M (@THM_Off) September 25, 2023