பாலாவின் வணங்கான்.. சர்ச்சையை கிளப்பும் First Look Poster.. பெரியார் எங்க இங்க வந்தாரு..?

bala directing vanangaan first look poster released and became sensation on social media

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இதையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வெற்றிகண்ட இயக்குனர் பாலாவுக்கு, கடைசியாக வெளிவந்த தாரை தப்பட்டை, நாச்சியார் மற்றும் வார்மா ஆகிய படங்கள் கைகொடுக்கவில்லை.

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா, 3வது முறையாக இணைந்த திரைப்படம் ‘வணங்கான்’.

bala directing vanangaan first look poster released and became sensation on social media

2டி நிறுவனம் சார்பாக சூர்யா, ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் அறிவித்தனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்கள் கன்னியாகுமரியில் நடைபெற்றது.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதன்பின் நிறுத்தப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே நடிகர் சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக இயக்குனர் பாலாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சூர்யா விலகினாலும், வணங்கான் படம் கைவிடப்படவில்லை என்பதையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இப்படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

bala directing vanangaan first look poster released and became sensation on social media

இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சர்ச்சையை Create செய்து வருகிறது. உடல் முழுவதும் சகதியுடன் அருண் விஜய் வலது கையில் பெரியார் சிலையையும், இடது கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post