திருமணம் குறித்து வெளியான செய்திக்கு ஓப்பனாக பதிலளித்த திரிஷா - வைரலாகும் ட்வீட்..!

trisha opens up about marriage rumours tweet getting viral

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார்.

trisha opens up about marriage rumours tweet getting viral

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில், பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 பாகங்களில் நடித்து மக்கள் ஆதரவை பெற்ற இவர், லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படமானது அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படி திரையுலகில் பிரபலமாக வலம் வரும் திரிஷா, அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர்.

நடிகை திரிஷாவுக்கு கிட்டத்தட்ட 38 வயது ஆகியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது கடந்த 2 3 நாட்களாக திரிஷா திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்தது.

trisha opens up about marriage rumours tweet getting viral

இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிஷா ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”, “KEEP CALM AND STOP RUMOURING” CHEERS! என குறிப்பிட்டுள்ளார்.

trisha opens up about marriage rumours tweet getting viral

Share this post