தற்கொலை முயற்சியா ? விஜய் டிவி சீரியல் நடிகர் ராகவேந்திரா புலி வெளியிட்ட வீடியோ !

Vijay tv serial actor ragavendra puli posted video on rumours spreading on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பலதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், ஒரு காலத்தில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள். இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.

Vijay tv serial actor ragavendra puli posted video on rumours spreading on social media

கனா காணும் காலங்கள் தொடரில் புலி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து ராகவேந்திரன் விலகவுள்ளதாக அறிவித்தார். அதற்கு காரணம், தன் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை, சம்பளமும் மிக மிக குறைவாக தருகிறார்கள் என சொல்லி பரபரப்பான புகார் சொல்லி இருந்தார்.

Vijay tv serial actor ragavendra puli posted video on rumours spreading on social media

தனது வாழ்வில் ஒரு சோகமான சம்பவமாக தனது காதல் தோல்வியடைந்ததாகவும், இதனால், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். மன அழுத்தத்தால் ராகவேந்திரன் உடல்நலம் மோசமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Vijay tv serial actor ragavendra puli posted video on rumours spreading on social media

தற்போது பார்ட் டைமில் தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் கூறி இருந்த ராகவேந்திரா, “ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடமும் டேமேஜ் ஆகிவிட்டது” என ட்ரிப் போடும் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார் ராகவேந்திரா.

Vijay tv serial actor ragavendra puli posted video on rumours spreading on social media

சமீபத்தில் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என சொல்லி இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நான் பாசிட்டிவ் ஆக தான் இருக்கிறேன், உடல்நிலை மோசமடைந்ததாக மட்டுமே நான் பதிவிட்டேன், அதை தற்கொலை முயற்சி என தவறாக செய்தி பரப்பாதீர்கள் என கூறி இருக்கிறார்.

Share this post