ஆடையின்றி நிர்வாணமாக போட்டோஷூட்.. ஷாக் கொடுத்த ரன்வீர் சிங் ஷாக் .. தீயாய் பரவும் போட்டோஸ் !

Actor ranveer singh nude photoshoot getting viral on social media

2010ம் ஆண்டு Band Baaja Baaraat என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரன்வீர் சிங். இதனைத் தொடர்ந்து, Ladies vs Ricky Bahl, Lootera, Goliyon Ki Raasleela Ram-Leela என பல பிரபல பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். வெகு சில திரைப்படங்களிலேயே முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார்.

Actor ranveer singh nude photoshoot getting viral on social media

2018ம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 83 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த 1983ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் அப்போதைய இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார்.

Actor ranveer singh nude photoshoot getting viral on social media

இதையடுத்து ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் கபூர் நாயகனாக இயக்குனர் ஷங்கர் உடன் பணியாற்ற உள்ளார். விரைவில் இதற்கான ஷூட்டிங்கும் தொடங்க உள்ளது. நடிகர் ரன்வீர் சிங், நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருபவர்.

Actor ranveer singh nude photoshoot getting viral on social media

வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என தனித்துவமாக விளங்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது இவர் நடத்தி உள்ள போட்டோஷூட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

Actor ranveer singh nude photoshoot getting viral on social media

தற்போது நாளிதழ் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளாராம்.

Actor ranveer singh nude photoshoot getting viral on social media

பெர்ண்ட் ரெனால்ட்ஸும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப் போன்றே தற்போது ரன்வீரும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவரின் இந்த போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.

Share this post