'வாரிசு' சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டைலாக வாக் போட்ட விஜய்.. இணையத்தில் லீக்கான வீடியோ !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்னதாகவே, அதாவது நேற்று அதாவது ஜூன் 21ம் மாலை 6.01 மணிக்கு ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட போவதாக அறிவிப்பு வெளியானது.
தளபதி விஜய் கோட் சூட் போட்டு செம ஸ்டைலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார். The Boss Returns என படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தளபதி விஜயின் பிறந்த நாளையொட்டி varisu படத்தின் 2வது லுக் வெளியானது. அதில் காய்கறி வண்டியில் விஜய் மேலே படுத்திருப்பது போலவும் அருகில் குழந்தைகள் சிலர் அமர்ந்திருப்பது போலவும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது, varisu படத்தின் 3வது லுக் வெளியானது. பைக் மேலே செம ஸ்டைலிஷாக விஜய் அமர்ந்திருப்பது போல போஸ்டர் வெளியானது.
இதற்கிடையே 2002ல் வெளியான ‘யூத்’ படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான “ஆல் தோட்ட பூபதி” பாடலை ரீமிக்ஸ் செய்ய ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு எப்படி செய்ததோ அது போல விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இதன் சாட்டிலைட் உரிமை ரூ.65 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் ரிலீசுக்கு முன்பே வாரிசு படம் அதன் மொத்த பட்ஜெட்டையும் எடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியது.
இதை தொடர்ந்து, தற்போது மற்றொரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தில் தளபதி விஜய், விஜய் ராஜேந்திரன் என்ற பெயரில் நடிப்பதாகவும், அவர் ஒரு அப்ளிகேஷன் டிசைனராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை விஜய் ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பட குழுவினருக்கு தலைவலியை உண்டாக்கியது. தற்போது மீண்டும் ஷூட்டிங் வீடியோ வெளியாகி உள்ளது வாரிசு குழுவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் மாடியில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
EXCLUSIVE : #Varisu ~ Vijay Rajendran Rocks @Actorvijay , 🔥😍pic.twitter.com/p8Cr5IBhbq
— #VARISU (@VarisuMovOffl) July 20, 2022