தியேட்டரில் அஜித் ரசிகர்கள் இப்படி பண்ணினது பாத்து ஆச்சரியப்பட்டேன்.. பாராட்டி பேசிய சீரியல் நடிகர்

Vijay tv serial actor praises about ajith fans in theatre

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என கருதப்படும் அஜித் அவர்களின் பிறந்த நாள் நாளை. இதனால், ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர். கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கு அஜித் சார்பில், அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட் சிலதை நாளை வெளியிட காத்திருக்கின்றனர்.

Vijay tv serial actor praises about ajith fans in theatre

இந்நிலையில், தொலைக்காட்சி சேனல்களும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்க காத்திருக்கின்றனர். இந்நிலையில், விஜய் டிவி அஜித் பிறந்தநாளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அதில் வேலைக்காரன் சீரியல் ஹீரோ அஜித் பற்றி ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.

Vijay tv serial actor praises about ajith fans in theatre

தியேட்டரில் வீரம் முதல் நாள் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நண்பர் மட்டும் மனைவியை அழைத்து வந்திருந்தார். அனைவரும் ஆடி கொண்டிருக்க அந்த பெண் உள்ளே செல்ல வழி இல்லாமல் திணறிக்கொண்டிருந்தார்.

Vijay tv serial actor praises about ajith fans in theatre

அந்த நேரத்தில் அனைவரும் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பெண்ணுக்கு வழிவிட்டு அவர் உள்ளே சென்ற பின் தான் இவர்கள் கொண்டாட்டத்தை மீண்டும் தொடங்கினர்.

Vijay tv serial actor praises about ajith fans in theatre

ஒரு ஹீரோவை பின்பற்றினால் அவரிடம் இருந்து இப்படித்தான் நற்குணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post