''மங்காத்தா' படத்துல அர்ஜுன் ரோல் நா பண்ணிருப்பேன்' என சொன்ன விஜய்.. வைரலாகும் வீடியோ !

Vijay speaks about arjun role in mankatha and venkat prabu speaks about mankatha 2

தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத உச்ச நட்சத்திர இடத்தை பிடித்துள்ள நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இதில், அஜித் அவர்களுக்கு மாஸ் திரைப்படமாக அமைந்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் நெகட்டிவ் வேடத்திலும் ஸ்டைலாக தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக பண்ணி இருப்பார்.

Vijay speaks about arjun role in mankatha and venkat prabu speaks about mankatha 2

இப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம். அப்படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்பது தான் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கை.

Vijay speaks about arjun role in mankatha and venkat prabu speaks about mankatha 2

இப்படத்தில் அஜித் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டுவந்தது அனைவரும் அறிவோம்.

Vijay speaks about arjun role in mankatha and venkat prabu speaks about mankatha 2

இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த வேடத்தில் விஜய் நடிக்க விரும்பியதாக அவரே கூறி இருந்ததாக கூறினார். இதனை பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபுவிடம் விஜய் தெரிவித்துள்ளார்.

Vijay speaks about arjun role in mankatha and venkat prabu speaks about mankatha 2

மேலும், தான் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 எடுக்க விரும்பியதாகவும், அதை மங்காத்தா ஷூட்டிங் நேரத்திலேயே அவர்களிடம் கதை சொன்னதாகவும் கூறி இருக்கிறார். அதனையும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Vijay speaks about arjun role in mankatha and venkat prabu speaks about mankatha 2

இந்த வீடியோவில் 6:40 முதல்..

Share this post