வாழு, வாழ விடு..! அஜித்துக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலம்..!

Actor Ajithkumar Ak Birthday May First Laboursday Wishes Opanner Selvam Admk

இன்று 51-வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் அஜித் குமார், இதுவரை 60 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் என்றைக்கும், அவரது ரசிகர்களாலும், மற்ற நடிகர்களின் ரசிகர்களாலும் நேசிக்ககூடிய அமைதியான நடிகராகவும், அன்பான மனிதராகவும் பார்க்கப்படுகிறார்.

Actor Ajithkumar Ak Birthday May First Laboursday Wishes Opanner Selvam Admk

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் ‘அமராவதி’யில் ஆரம்பித்து ‘காதல் மன்னன்’, ‘ஆசை’, ‘அமர்க்களம்’ என தொடர்ந்து ‘வலிமை’ வரை தனது 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். சினிமாவில் கதாநாயகனாக அவருக்கு 30வது வருடம் இது.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நடிகர் அஜித்துக்கு முதல் ஆளாக, அதாவது நேற்று இரவே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Ajithkumar Ak Birthday May First Laboursday Wishes Opanner Selvam Admk

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று அவர் வாழ்த்தி உள்ளார்.

Share this post