பிக்பாஸ் செல்வதை உறுதி செய்த குக் வித் கோமாளி பிரபலம்.. வைரலாகும் பதிவு..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி (BiggBoss) கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்படவுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 6 சீசன் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட உள்ளதாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னணி விஜய் டிவி பிரபலம் ஒருவர் தாம் பிக் பாஸ் செல்வதை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார். அது காமெடியன் குரேஷி தான். இன்ஸ்டாவில் பிக்பாஸ் போஸ்டர் முன் நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதனால் அவர் பிக் பாஸ் செல்வதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.