'விடாமுயற்சி' டிராப்'ஆ..? வாடிய முகத்துடன் அஜித்.. Viral Photo.. அச்சோ என்ன இப்படி ஆயிட்டாரு..?
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். துணிவு படத்திற்கு பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார். AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக முதலில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகினார்.
கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களினால் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், ஷூட்டிங் லேட் ஆகி வருவதால், மற்ற படங்களுக்கு திரிஷா கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும், இதன் காரணமாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தற்போது கால்ஷீட் தருவது சிரமம் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒவ்வொருவராக படத்தை விட்டு விலகி வரும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும் விலகும் முடிவில் இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் வாடிய முகத்துடன் இருப்பது குறித்து ரசிகர்கள் கருத்துகள் கூறி வருகின்றனர். மெல்லிசான சிரிப்பு மனதில் ஏதோ கவலை அல்லது குழப்பத்துடன் அவர் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.