இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!
தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் முதல் ஜெயிலர் வரை ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகராக கலக்கி வந்தவர்.
சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார்.
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வருவதற்கு மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான் முக்கிய காரணம்.
இவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறி செம ட்ரெண்ட் ஆகி வந்தது.
டப்பிங்கிற்காக இன்று காலை டப்பிங் ஸ்டூடியோ வந்த மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாரிமுத்து அவர்களின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.