இது அவங்களுக்கே கேவலமாக இல்லயா..? பிரபல தமிழ் நடிகையை வெளுத்து வாங்கிய பாடகி ராஜலட்சுமி..!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தவர் ராஜலக்ஷ்மி. தனது கணவருடன் இந்த ஷோவில் பங்கேற்ற இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் பாடுவதற்கு கமிட் ஆகினார். சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடல் மூலம் பிரபலம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, புஷ்பா படத்தில் சாமி சாமி பாடல் மூலம் தென்னிந்திய புகழ் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பிரபல பாடல்களை பாடி வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகை குறித்து ஒப்பனாக பேசியது செம வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சீரியலில் நடிகையாக நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை சம்யுக்தா. இவரும் நடிகர் விஷ்ணுகாந்த்தும் சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதலில் விழுந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
15 நாட்களில் இருந்து சண்டை போட்டுகொண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் மாறி மாறி சமூக வலைத்தளங்களில் தங்கள் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை பேசுவதாக கூறி பெர்சனலாக நடந்த நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசி வந்தனர்.
இதுகுறித்து பாடகி ராஜலட்சுமி, அவர் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் கொண்டு வந்து பேசுவது கேவலமாக இல்லையா தங்களுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் அனைவரும் பார்க்கும்படி எப்படி வலைத்தளங்களில் பேசுவது என்று கண்டிக்கும் விதத்தில் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.