10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் Comeback கொடுக்கும் நஸ்ரியா.. அதுவும் இந்த டாப் ஹீரோ படத்துலயா..?
துரோகி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இயக்குனர் சுதா கொங்கரா. இதனைத் தொடர்ந்து, இறுதி சுற்று, சூரரை போற்று போன்ற திரைப்படங்களை இயக்கினார். 2020ல் சூர்யா – சுதா கொங்கரா – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகி ஓடிடியில் நேரடியாக ரிலீசான திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.
ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
இந்நிலையில், சூர்யா43 திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா43 ஜிவி பிரகாஷின் 100வது திரைப்படம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் Surprise அப்டேட் ஒன்று வெளியாகிவுள்ளது அதன்படி இப்படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்படி நடித்தால் இப்படம் அவருக்கு பெரிய Comeback படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.