‘லக லக லக’ சொல்ல திணறிய கங்கனா.. அடேய் என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க..??
2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, சோனு சூட், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மலையாள திரைப்படமான Manichitrathazhu படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பார்த்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜோதிகாவின் நடிப்பு பயணத்தில் நல்ல மைல்கல்லை அமைத்து தந்தது.
இதன் தொடர்ச்சியாக, சந்திரமுகி 2ம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார். மேலும், வடிவேலு, மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் விமர்சனங்களில் சிக்கி வருகிறது. கங்கனா சந்திரமுகி கதாபாத்திரத்தில் பொருந்தவில்லை என பல மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பேசிய கங்கனா, ‘லக லக’ என்பதை இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சொல்வதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டதாக கூறினார். “டப்பிங் பேச கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. ’லக லக லக’ என்று சொல்வதற்கு சிரமப்பட்டேன்.” என்றார் கங்கனா கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர், படத்தோட முக்கிய வசனமே அதுதான்.. இனி படம் ரிலீஸ் ஆனா தான் தெரியும் என கூறி வருகின்றனர்.