மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் !

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து வெளியான படம் டான். அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்றது.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

மேலும், இப்படத்தில் விஜய் டிவியின் KPY நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான Monisha Blessy சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.

Vijay tv celebrity to act as sivakarthikeyan sister in maaveeran movie

Share this post