'யூஸ் பண்ணின இந்த துணிங்களா தான் விக்கறீங்களா ?' போட்டோ பகிர்ந்து வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிரபல திரையுலக நட்சத்திரங்கள் விஜய குமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது சகோதரிகள் பிரபல நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, சகோதரர் நடிகர் அருண் விஜய்.
2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் அவர்களை திருமணம் செய்தார் வனிதா. இவர்களுக்கு ஸ்ரீ ஹரி என்னும் மகனும், ஜோவிகா என்னும் மகளும் உள்ளனர். ஆகாஷ் மற்றும் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக பிரியவே, ஸ்ரீ ஹரி தாத்தா விஜய குமார் மற்றும் தனது ஆகாஷ் அவர்களுடன் சென்றுவிட்டார்.
பின்னர், வனிதா 2வதாக ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2012ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர். 2 மகள்களுடன் தனியே வசித்து வந்த வனிதாவுக்கு எந்த வித ஆதரவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வந்தார்.
பின்னர், 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. ஆனால் சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
1995ம் ஆண்டு சந்திரலேகா என்னும் படத்தில் விஜய் ஜோடியாக வனிதா நடித்தார். அதனைத் தொடர்ந்து, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
பின்னர், சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் எழவே, திரைத்துறையில் இருந்து விலகி இருந்த வனிதா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மிக பிரபலம் அடைந்தார்.
தற்போது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர்கள் என பங்கேற்று வரும் வனிதா, தனி யூடியூப் சேனல், துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என பல அவதாரம் எடுத்து வருகிறார்.
தற்போது, தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ, எஸ்தல் என்டர்டெய்னர் நிறுவனம் சார்பில் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் நடிப்பை தவிர பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை நடத்தி வருகிறார். முன்பு போல் இல்லாமல் இப்போது வனிதா பயங்கர மாடர்னாகவும் மாறிவிட்டார்.
இந்நிலையில், வனிதாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, வனிதா அவர்கள் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதில் மாடல் பொம்மைகளுக்கு டிரஸ் போட்டு போஸ் கொடுப்பதை போல, வனிதாவும் ஆடை அணிந்து மாடலிங் செய்து இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், மாடலிங் பண்ண வேண்டிய வயசா உங்களுக்கு?, நீங்க யூஸ் பண்ண ட்ரெஸ்ஸ தான் கடைல விக்கிறீங்களா என்றும் வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.