செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் perform செய்த நடிகர் சிவகார்த்திகேயன் மகள்.. வைரலாகும் வீடியோ !

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டராக மாறியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மைல்கல்லாக மாறியது.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா, பல விருது மேடைகளில் குழந்தையாக நாம் பார்த்துள்ளோம். இவர் வளர்ந்து கியூட்டாக இருக்கும் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது. சிறு வயதிலேயே கனா படத்திற்காக இவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியது.

Sivakarthikeyan daughter aaradhana performs in chess olympiad finals

இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில். ஆராதனா தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Share this post