ஜெயிலர் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல தமிழ் நடிகை.. அவரே வெளியிட்ட தகவல் !

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தலைவர்169 இவர் இயக்கமாட்டார் என தகவல் பரவி வந்த நிலையில், ரஜினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர்169 பட போஸ்டரை பதிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஜெயிலர் படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷுட்டிங்கே ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் தகவலாக, தலைவர்169 படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட மெகா ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பதாக அப்டேட்கள் வெளியானது.
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி படத்தில் அவரின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியது.
படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியானது. அதன்படி, ஜெயிலர் படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், அதனால் தான் ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கியமான ரோலில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அவருக்கு ஜோடியாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
20 ஆண்டுகளுக்கு பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் சேர்ந்து நடிப்பதால், ‘ஜெயிலர்’ படம் குறித்த அதிகரித்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரம்யா கிருஷ்ணன், ஜெயிலர் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 10ம் தேதி துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.