கமலின் விக்ரம் படத்திற்கு முன்பே, விஜய் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் !
4 வருடங்களுக்கு பிறகு, உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 450 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.
இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 2 மாதங்கள் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடிய இப்படத்தில் இடைவேளை காட்சி பெரியளவில் பேசப்பட்டது.
அதற்கு முக்கிய காரணம், அப்படத்தில் குறிப்பிட்ட காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா தான். ஆனால் விக்ரம் படத்திற்கு முன்பே அந்த Mocobot கேமராவை விஜய்யின் திரைப்படத்தில் பயன்படுத்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் Mocobot-ஐ பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் விஜய்யின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஆனால் விக்ரம் படத்தின் காட்சி தான் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
#BEAST is The First Tamil Movie To Use Mocobot Before #VIKRAM 🔥
— ECR.P.Saravanan (@EcrPSaravanann) August 8, 2022
(Also Used in #Navarasa Teaser)
DOP @manojdft
That Spin From #ThalapathyVijay pic.twitter.com/6PECqS1JvC