சித்ராவின் தற்கொலை வழக்கில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்.. ஹேமந்த் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து அனைவரும் அறிவர். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. இதற்கான உண்மை காரணம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் இல்லை.
சித்ரா ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்திருந்தார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோடியாக வந்து இருந்த இவர்கள் சந்தோசமான ஜோடியாகவே எல்லாரும் பார்த்தனர். ஆனால், பதிவு திருமணமாகி 3 மாதத்திற்குள்ளேயே கணவருடன் தங்கியிருந்த போது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர்கள் அதன் பின்னர் பிரம்மாண்டமாக திருமணம் செய்யவிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சித்ராவின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் அளித்த தகவல் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து வந்தார் சித்ரா. அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெட்டு நடிப்பது, அழகான புடவைகளை தேர்வு செய்து அணிவது என இருந்து வந்தார்.
சித்ராவின் தற்கொலை குறித்து இன்னும் மர்மம் நீடித்து வரும் நிலையில், அவரது மரணத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் திடுக்கிடும் தகவல் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கு விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் மற்றும் அண்ணா நகரில் மெஸ் நடத்தும் குறிஞ்சி செல்வனும் நிறைய தொல்லை கொடுத்ததாக ஹேமந்த் கூறியுள்ளார். அதற்கான ஆதாரம் சித்ராவின் நண்பர் ரோஹித்திடம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.