'AK61' பட அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிய ரசிகர்.. வைரலாகும் போட்டோ.. அஜித் இதற்கு பதிலளிப்பாரா?

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம்.

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

இப்படத்தில், மஞ்சு வாரியார், மற்றும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர். ரசிகர்கள் அப்டேட் கேட்டு விதவிதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை செல்போனில் படம்பிடித்து பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற whatsapp குழுவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ajith fan asked ak61 update by writing with blade in his hand photo getting viral

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. குரூப் அட்மின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கட்அவுட்டிற்கு பால் ஊற்றுவது, காவடி எடுப்பது இதுபோன்ற செயல்களை நடிகர் அஜித் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. அதிலும், இப்படி உடலுக்கு தீங்கு செய்யும் செயலை செய்ததை தொடர்ந்து, அஜித் இதற்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தையும் நடிகர் அஜித் கலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post