‘வாரிசு’ படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக்.. படக்குழுவினர் அதிர்ச்சி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படம் வரும் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் கசிந்து வருகிறது. இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக விஜய் நடிக்கும் இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்த நாயகன் குடும்பத்திற்காக கிராமத்திற்கு திரும்பும் தோற்றத்தில் விஜய் நடிக்கிறாராம். இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் இதனை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.
இந்நிலையில், ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என தொடங்கும் அந்த பாடலை நடிகர் விஜய் தான் பாடி உள்ளாராம். இப்பாடலைத் தான் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது திருட்டுத்தனமாக அதன் ஆடியோ இணையத்தில் லீக் ஆகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லீக்கான வீடியோவை நீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Heyyy Ranjithamey 💥 Vibe ...💟#Varisu #VarisuPongal #ThalapathyVijay𓃵 #Thalapathy67 pic.twitter.com/9x74TPkAiu
— 🆂🅰🅼🅱🅰🆅🅰🅼 (@Sambavam_007) October 18, 2022
💫💥 Hey ranjithame 🔥❤️ #varisu @actorvijay pic.twitter.com/Q2FbhGPmKV
— விஜய் அடைக்கன் (@vijay_adaikkan) October 18, 2022