கணவரை பிரிந்த காரணம் இதுதான்.. தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து ரக்ஷிதா சொன்ன உண்மை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரக்சிதா மஹாலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மொழியில், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என அனைத்து பிரபல சேனல்களிலும் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம், இளவரசி, சரவணன் மீனாட்சி 2 & 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
தன்னுடன் சீரியல் தொடரில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ரக்சிதா ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வந்தார். தற்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் தொடக்க விழாவில், ரச்சிதா அவரது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தும்போது அப்பா, அப்பா மற்றும் சகோதரரை பற்றி பேசினார். அவரது பூனைக்குட்டியை பற்றி கூட பேசினார். ஆனால் கணவர் தினேஷை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.
பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதா, கதிர், குயின்ஸி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்த போது, திருமணம் குறித்து பேசுகையில் ‘நம்மளோட அடுத்த தலைமுறை எவ்ளோ கஷ்டப்பாடுவாங்க, அவங்களுக்கு எல்லாம் திருமணம் என்ற ஒரு கான்சப்டே இருக்காது. நான் எதற்கு எடுத்தாலும் குடும்பம் குடும்பம் என்று பார்த்து தான் அனைத்தையும் இழந்தேன். என் மொத்த வாழ்க்கையும் விமர்சங்களை பார்த்தே போய்விட்டது. என் வாழ்க்கை முழுதும் குடும்பம் குடும்பம் என்று போய்விட்டது.
நான் ஒரு பார்ட்டிக்கு கூட போனது இல்லை. நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள் பெங்களூரில் பிறந்துவிட்டு பார்ட்டிக்கு கூட போக மாட்ற என்று கேட்பார்கள். ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் கூட நான் குடும்பத்துடன் மட்டும் தான் போவேன். குடும்பம் தான் என்னுடைய பலம் மற்றும் பலவீனம். நான் அதனாலேயே நான் நிறைய விமர்சங்களை சந்தித்துவிட்டேன். நம் பிரச்சனையை பற்றி மற்றவர்கள் பேசி என்ன ஆக போகிறது. யாரும் வந்து நமக்கு உதவி செய்யப்போவது இல்லை. அதனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது.’ என கூறியுள்ளார்.
மேலும், பேசிய அவர் தான் கணவருடன் சந்தித்த பிரச்சனை பற்றி பேசியுள்ளார். ரச்சிதா சம்பாதிக்கும் பணத்தை அவரது அப்பா அம்மாவுக்கு கொடுக்க கூடாது என்று தினேஷ் பிரச்சனை செய்தது பற்றி அவர் கூறி இருக்கிறார்.”அந்த பிரச்சனையையே நான் அதிகம் பார்த்துவிட்டேன். அதனால் அவர்களுக்கு என்று ஒரு பணம் இருக்க வேண்டும் என சொல்விட்டேன். நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அதை எனக்கு கொடுக்காதீர்கள் என அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன்” என ரச்சிதா தெரிவித்து உள்ளார்.