அடுத்தடுத்து விலகிய 3 நடிகைகள்.. ராஜா ராணி 2 குறித்து தற்போதைய சந்தியா கூறிய ஷாக்கிங் உண்மை..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும். சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதன்பிறகு, ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை அர்ச்சனா, சீரியலில் இருந்து சில காரணங்களுக்காக வெளியேறினார். இந்நிலையில், திடீரென எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், சந்தியாவாக நடித்த ரியாவும் சீரியலில் இருந்து விலகி ஷாக் கொடுத்தார். அவருக்கு பதில் ஆஷா வெங்கடேஷ் சந்தியாவாக நடித்து வருகிறார். இதற்கான காரணம் குறித்தும் ரியா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதுகுறித்து, தற்போது சந்தியாவாக நடித்து வரும் ஆஷா வெங்கடேஷ் அவர்களிடம் ஒரு பேட்டியில் சீரியலில் நடிகைகள் விலகி மாற்றப்பட்ட காரணம் என்ன என்று கேட்டபோது, “எனக்கு தெரியாது. எல்லாமே திடீரென நடந்தது. எனக்கு டைம் கிடைக்கவில்லை, அதுவும் 24 மணி நேர ஷூட்டிங் நடந்து ஒரு மணி நேரம் தான் நானே தூங்கினேன்” என்று ஆஷா கூறியிருக்கிறார்.