'நீயெல்லாம் காமெடியன்னு நீயே முடிவு பண்ணிக்காத'.. சூரியை விமர்சித்த விஜய்சேதுபதி..!

ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படம் திண்டுக்கல், சத்தியமங்கலம் வனப்பகுதி போன்றவற்றில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனை குறித்த மைய கருவை கொண்டு இப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நேற்று விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் சூரி, விஜய் சேதுபதி பற்றி பேசியபோது, நான் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து முடித்ததும் விஜய் சேதுபதி இடம் காமெடி நன்றாக இருக்கிறதா என கேட்டேன்.
அப்போது, விஜய் சேதுபதி நீ முதலில் உன்னை ஒரு காமெடியன்னு முடிவு பண்ணிடாத, காமெடி நல்லா இருக்கு ஆனா அதை தாண்டி நீ ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட் உன்னால எந்த கதாபாத்திரத்தையும் நல்லா பண்ண முடியும் அதனால் அதற்கு முயற்சி செய் என கூறினார் என சூரி பேசியது வைரலாகி வருகிறது.