'பொல்லாதவன்' படத்துல இதெல்லாம் என்ன பொருத்த வரைக்கும் கண்ட்றாவியான சீன்ஸ் தான்: வெற்றிமாறன் Open Talk..!

vetrimaran open talk about comedy in polladhavan movie

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகை வெற்றிமாறன். தனது ஒவ்வொரு படத்திலும் மிக கவனம் செலுத்தி இவர் எடுப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில் நுட்ப துறையினரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

vetrimaran open talk about comedy in polladhavan movie

இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது.

vetrimaran open talk about comedy in polladhavan movie

முதல் படம் முதலே வெற்றி தர தொடங்கிய இந்த கூட்டணி, பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மெகா ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணையும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வடசென்னை பாகம் 2 உருவாகி வரும் நிலையில், அதன் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

vetrimaran open talk about comedy in polladhavan movie

தற்போது தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு வலம் வரும் இவர் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் இன்று பலரது பேவரைட். 2007ம் ஆண்டு தனுஷ், திவ்யா, சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

vetrimaran open talk about comedy in polladhavan movie

வெற்றிமாறன் எடுக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் காமெடி காட்சிகள் இருக்காது சீரியஸாக தான் எப்போதும் இருக்காது. இதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய வெற்றிமாறன், ‘பொல்லாதாவன் திரைப்படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல கண்ட்றாவியான காட்சிகள் அதில் இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அதெல்லாம் நல்ல காட்சிகள் இல்லை என்பது என் எண்ணம். கதையோடு சேர்ந்து காமெடி வருவது எனக்கு சம்மதம்.

vetrimaran open talk about comedy in polladhavan movie

ஆனால், தனி காமெடி டிராக்கில் எனக்கு உடன்பாடு இல்லை. பொல்லாதவன் என் முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் சொன்னதை நான் கேட்க வேண்டியிருந்தது. சந்தானமும் – கருணாஸும் ஒரு காமெடியை உருவாக்குவார்கள். படப்பிடிப்பில் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால், நான் சீரியஸாக பார்த்துக்கொண்டிருப்பேன். அதைபார்த்த சந்தானம் ‘எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அதனால டைரக்டர் இத வைக்க மாட்டார். நாம வேற படத்துல இந்த காமெடியை வச்சிப்போம்’ என கருணாஸிடம் காமெடியாக சொல்வார். அப்படி உருவான காமெடி தான் அவை’ என வெற்றிமாறன் கூறினார்.

Share this post