'ஜிலேபி மாதிரி'.. அனுஷ்காவின் அந்த இடம் ரொம்ப புடிக்கும்.. ரசிகரா மாறிட்டேன்' நடிகரின் பேச்சால் எழுந்த சர்ச்சை..!

தெலுங்கு மொழியில் சூப்பர் என்னும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. மஹாநந்தி, அஸ்திரம், ஸ்டாலின் போன்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்த அனுஷ்கா, மாதவன் ஜோடியாக ரெண்டு என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
தெலுங்கு மொழியில் பெரிய வரவேற்பை பெற்று வந்த இவர், தனது 2 படமே தளபதியுடன் ஜோடியாக வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 1,2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகமதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பு பயணத்தில் அருந்ததி மற்றும் பாகுபலி திரைப்படங்கள் பெரிய மைல்கல்லாக அமைந்தது.
அதன்பிறகு, அனுஷ்கா சரியாக படங்கள் நடிப்பதில்லை.இவர் திடீரென உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார். இன்ஸ்டாவில் சில நேரங்களில் புகைப்படங்கள் பதிவிடும் அனுஷ்கா சமீப காலமாக ஆக்டிவாக இருக்கிறார்.
2020ம் ஆண்டு கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகி இருந்தது. கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு, மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படம் நடிப்பதாக அறிவித்தார். அந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள். ஆனால் மற்றபடி வேறு எந்த தகவலும் வரவில்லை.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்காவால் மீண்டும் எடையை குறைக்கவே முடியவில்லை. இதனால் இவரது சில புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் அலி அவர்கள் அனுஷ்காவை மோசமாக வர்ணித்து பேசியது வைரலாகி வருகிறது.
அவர் பேசியதாவது, “அனுஷ்கா ஜிலேபி போல, எல்லாருக்கும் அவரை பிடிக்கும். அவருக்கு அழகான தொடை. இவர் பில்லா படத்தில் நடித்ததை பார்த்த பிறகு, அனுஸ்காவின் ரசிகராக மாறிவிட்டேன்” என பேசியுள்ளார். இப்படி அவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறவே, பின்னர் அனுஷ்காவிடன் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.