Viral Video; 'தல'ன்னு சொன்னதும் கத்திய மாணவர்கள்.. ’என்ன பேசிட்டு இருக்கோம்🤨..’ கோபப்பட்ட விஜய் சேதுபதி !

vijay sethupathi got angry on students who shouted for saying thala

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.

vijay sethupathi got angry on students who shouted for saying thala

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.

vijay sethupathi got angry on students who shouted for saying thala

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

vijay sethupathi got angry on students who shouted for saying thala

தற்போது, விடுதலை, காந்தி டாக்ஸ், ஹிந்தியில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் சென்னை கல்லூரி ஒன்றில் பங்கேற்று அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னை லயோலா கல்லூரியில் மேடையில் பேசும்போது தலை என சொன்னதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அதற்கு கோபமாக விஜய் சேதுபதி மாணவர்களிடம் பேசி இருக்கிறார்.

Share this post