ஆஜித் - கேப்ரியல்லா இடையேயான உறவு குறித்து முதன்முதலாக பேசிய ஆஜித்.. அப்படி போடு !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி ஜூனியர் நிகழ்ச்சியின் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரியல்லா. இதனைத் தொடர்ந்து, தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார்.
மேலும், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான 7ம் வகுப்பு C பிரிவு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவர், இதன் மூலம் கிடைத்த பிரபல மூலம் வளர்ந்து வரும் நடிகையாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தனது தனித்துவத்தை காட்டும் விதமாக பங்கேற்றார். விஜய் தொலைக்காட்சியின் தத்து பிள்ளை என்றே சொல்ல கூடிய அளவிற்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
தற்போது, ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் கேபி, சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது, இவர் குறித்து தற்போது ஒரு விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, இவருக்கும் ஆஜித்துக்கும் ஏற்பட்ட நட்பு அவர்கள் வெளியே வந்த பிறகும் கூட தொடர்ந்து வருகிறது. இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் நடனம் ஆடினர். மேலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டான்ஸ் ஆடி அதன் வீடியோவையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூட சில வதந்திகள் பரவியது. இந்நிலையில் முதல் முறையாக ஆஜித்திடம், கேப்ரியல்லா உடனான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு பதில் அளித்துள்ள ஆஜித், நாங்கள் இருவரும் அது போல் பழகியதே இல்லை. அண்ணன் - தங்கை உறவு முறையில் தான் பழகி வருவதாக கூறியுள்ளார். இவருடைய பதில், இருவருக்கும் இடையே இப்படிப்பட்ட ஒரு உறவா என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.