Viral Video: "அஜித் Fan என்பதால் பிரேம்ஜியை விஜய் வேண்டாம்னு சொன்னாரு" - வெங்கட் பிரபு போட்டுடைத்த உண்மை..!
பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.
எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விஜய் நடிக்கும் தளபதி68 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
அதன்படி, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் இப்படம் உருவாகவுள்ளது. தற்போது விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் விஜய் தோற்றத்தை 3D VFX டெக்னாலஜியில் ஸ்கேன் செய்து இருக்கின்றனர். இதன் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.
வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே பிரேம்ஜி அதில் இருப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் தளபதி68 படத்தில் நடிகர் பிரேம்ஜி நடிக்க கூடாது என விஜய் சொன்னதாக வெளியான சர்ச்சை தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது ஒரு பேட்டியில் தளபதி என்னிடம் நானும் வெங்கட்டும் படம் பண்ணினா நீ நடிக்க கூடாதுனு சொன்னார்.
ஏன்னு கேட்டதுக்கு நீங்க தல ஆளு. நீ வேணும்னா மியூசிக் பண்ணு. ஆனா நடிக்க கூடாது என்று சொன்னார் என அந்த நகைச்சுவை கலந்துரையாடலை பேசி இருந்தார்.
இப்படி இவர் பேசியிருந்ததை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து சர்ச்சையாக்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் இதற்கு வெங்கட் பிரபு, “இது மங்காத்தா படத்தின் பின் நடந்த இது அதுவும் விஜய் காமெடிக்காக சொன்ன ஒரு விஷயம்.
இதை தேவையில்லாமல் சர்ச்சையாக்காதீர்கள்” என்று கூறியிருக்கிறார். எனவே, இந்த படத்தில் பிரேம்ஜி நடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.