'2026 - முதல்வர் வேட்பாளர் விஜய்' பரபரப்பை கிளப்பிய போஸ்டர் பதிவு !

Vijay mentioned as 2026 cm candidate poster getting viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஆரம்ப காலத்தில் திரையுலகில் இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் பெரிதும் இல்லாத போதிலும், ஆண்டுகள் செல்ல தற்போது இவரை பிடிக்காதவரே இருக்காது என்ற அளவிற்கு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

Vijay mentioned as 2026 cm candidate poster getting viral

தனது நடிப்பு திறமை, பணிவான குணம் அனைத்தின் மூலம் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும், தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

Vijay mentioned as 2026 cm candidate poster getting viral

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்த்த பலரும் போட்டியிட்டு, சிலர் வெற்றியும் பெற்றனர். நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்குவார் எனப் பலரும் கூறிவருகின்றனர்.

Vijay mentioned as 2026 cm candidate poster getting viral

அதற்கான அடித்தளமாக தான் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தினரை தேர்தலில் போட்டியிட வைத்ததாகவும் சிலர் கூறி வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்ட்டரில் முடிவு எடுத்தால் முதல்வர்தான் என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அத்துடன் 2026 ல் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்று அவரது புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகளை கிளப்பியுள்ளது.

Vijay mentioned as 2026 cm candidate poster getting viral

Share this post