விக்ரம் வேதா இல்ல.. இந்த டைம் விக்ரமுடன் வேதா.. செம காம்போ..

Vikram and vijay sethupathi to act together in upcoming films

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது ரசிகர்கள் விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது.

தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, விக்ரம் உடன் ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக நல்ல ரெஸ்பான்ஸ் பெற்ற திரைப்படம் கடைசி விவசாயி இப்படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கும் இவர் விக்ரம் உடன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Share this post