இணையத்தில் லீக்கான லியோ.. ஆர்வக்கோளாறுகளால் பேர் அதிர்ச்சியில் படக்குழு..!
லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி, கௌதம் மேனன், அர்ஜுன், பல நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் படத்தின் மீது அளவு கடந்து எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில், முதல் காட்சியை பார்க்க சென்ற ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக படத்தில் விஜயின் இன்ட்ரோ காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லியோ படத்தில் முதல் பத்து நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மாசாக இருக்கும் என்று லோகேஷ் கூறியுள்ள நிலையில், இதுபோன்று ரசிகர்கள் படத்தை ஸ்பாயில் செய்யும் விதமாக வீடியோ எடுத்து வெளியிடுவதால் படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக ஸ்பாய்லர் செய்வது தவறான செயல் என்றும் இது போன்ற செயலில் ரசிகர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று படக்குழு தெரிவித்து வருகின்றனர்.