ஆன்மிக பயணத்தில் அமலா பால்.. வெளியான லேட்டஸ்ட் படங்கள்..!

actress-amala-paul-devotional-tour-photos

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் அமலா பால். சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கடற்கரைப் பகுதிகளிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வந்தார்.

actress-amala-paul-devotional-tour-photos

அமலா பால் இதற்கு முன்பு தொடர்ச்சியாக பல சர்ச்சைகளை எதிர்கொண்டார். திரைப்பட இயக்குனரான விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்று விட்டார். முன்னதாக, நடிகை அமலா பால் நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

actress-amala-paul-devotional-tour-photos

இப்படியாக, கவர்ச்சியாக புயலாக வலம் வந்த அமலா பால் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியாக தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து கவர்ச்சி அமலாபால் அமைதியான அமலாபால் ஆக மாறியது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post