அவ்வ்வ்வ்… ச்சோ CUTE.. தாய் மசாஜ் கொடுத்த நயன்: விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி டைம் வீடியோ..!

ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நயன்தாரா. அதன்பின் சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து சறுக்களை சந்தித்து வந்த நயன்தாராவை தூக்கி நிறுத்திய படம் பில்லா தான்.
நயன்தாரா சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம் பட வாய்ப்பு இல்லாமல் என வெறுமையில் சில நாட்கள் இருந்தார். மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடிதான் அப்படத்தில் காதுகேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது, இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா தற்போது, தனது மகன்களுக்கு மசாஜ் செய்து சுகமாக உறங்க வைக்கும் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் இணையதளத்தில் வெளியிட்டு மை உயிர் Chillin என கேப்டன் கொடுத்து பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.