லியோ படத்துக்கு காச வாங்கிட்டு ஜில்லா படத்தை போட்டு காட்டுறீங்களே.. கடுப்பாகி ரகளை செய்த ரசிகர்கள்..!

jilla-movie-was-telecasted-instead-of-leo-in-manamadurai

லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி, கௌதம் மேனன், அர்ஜுன், பல நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் படத்தின் மீது அளவு கடந்து எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம்.

jilla-movie-was-telecasted-instead-of-leo-in-manamadurai

இந்தநிலையில், சிவகங்கை மானாமதுரையில் உள்ள பிரியா தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டது. அப்போது லியோ படத்தின் ஆடியோ சரியாக கேட்காத காரணத்தினால், ரசிகர்கள் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.

jilla-movie-was-telecasted-instead-of-leo-in-manamadurai

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க நிர்வாகிகள் லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படத்தை போட்டு இருக்கிறார்கள். இதனால் கடுப்பான ரசிகர்கள் லியோ படத்தை போடுமாறு எழுந்து நின்று சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Share this post