லியோ பட ப்ரோமோஷன் & ஆடியோ லான்ச்சிற்கு ரெடியான தளபதி விஜய்.. இனி மாஸ் அப்டேட் தான்..!

vijay got ready for leo audio launch and promotion works

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, 2வது முறையாக விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் லியோ.

திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

vijay got ready for leo audio launch and promotion works

இப்படத்தின் முதல் சிங்கிள் “நா ரெடி” பாடல் விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபுவுடன் ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள அடுத்த படத்தில் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக, வெங்கட் பிரபுவும் விஜய்யும் படத்தின் 3D ஸ்கேன் வேலைகளுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றனர். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியுள்ள விஜய், சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்த தந்தையை சென்று சந்தித்தார். தற்போது, அடுத்தகட்டமாக, லியோ பட ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ லான்ச்சிற்கு ரெடி ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Share this post