" 'ஜெயிலர்' படம் Average தான்.. இதுனால தான் ஹிட் ஆச்சு".. ரஜினி பேச்சால் கிளம்பிய சர்ச்சை..!
தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே.
அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போடும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், ஜாபர், ரெடின் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இத்திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் விலையுயர்ந்த கார்களை பரிசளித்தார்.
மேலும், படத்தில் பணியாற்றியவர்களுக்கும் தங்க நாணயமும், வெள்ளி நாணயங்களும் வழங்கினார். படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த முக்கிய நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டனர்.
அப்போது, விழாவில் பேசிய ரஜினி, “ஜெயிலர் திரைப்படம் ஆவரேஜ் தான். அனிருத் இசையினால் தான் படம் ஹிட் ஆகியுள்ளது” என அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பும், பீஸ்ட் தோல்வி குறித்து பேசிய இவர் தொடர்ந்து நெல்சனை இப்படி பேசுகிறார் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது.