'இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..' கோபத்தில் மஹிமா நம்பியார் லீக் செய்த வீடியோ..!

mahima nambiar posted video in anger asking director and choreographer to apologize to her

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ரத்தம். வரும் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் பணியாற்றியிருகிறார். இந்நிலையில், மஹீமா நம்பியார் கோபமாக படக்குழுவை திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mahima nambiar posted video in anger asking director and choreographer to apologize to her

அதாவது இப்படத்தின் ஒரு பாடலுக்காக மஹீமா நம்பியார் அவர்களுக்கு ரிகர்சல் கொடுத்து நடனமாட வைத்துவிட்டு கல்யாண் மாஸ்டர் திடீரென டான்ஸ்லாம் இப்படத்தில் கிடையாது பேக்கப் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இயக்குனர் அமுதன் படத்தில் பாடல்கள் கிடையாது என்று கூறியதாகவும் தெரிந்துள்ளது. இதற்கு நடிகை மஹீமா, உங்க சண்டையை பிறகு வைத்துக்கொள்ளுங்கள் அமுதன் - கல்யாண்.

நீங்கள் என்னுடைய நேரத்தை வீணடித்தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், என்ன பழக்கம் இது என்று டிவிட்டரில் அந்த வீடியோவை பதிவிட்டு திட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இந்த விஷயம் முழுவதும் படத்தின் புரமோஷனுக்காக செய்கிற வேலை தான் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Share this post